சென்னை, நவ.25

வங்­கக் கட­லில் உரு­வா­கி­யுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலு­வ­டைந்து வருகிறது. அது ேநற்று காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­ல­மாக வலு­வ­டை­கி­றது. அதன்­பி­றகு, புய­லா­க­வும் உரு­மா­றும். அதே­நே­ரத்­தில், இலங்கை அருகே நேற்று இன்­னொரு புயல் சின்ன­மும் தோன்­று­கி­றது. இதன் கார­ண­மாக தமிழ்­நாட்­டில் தொடர்ந்து மழை பெய்­யும். நேற்று மிக கன­ம­ழைக்­கான ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ளது. 12 முதல் 20 செ.மீ. வரை கன­மழை பெய்­யும். இந்த நிலை­யில் நேற்று தூத்­துக்­கு­டி­யில் ஒரு­வர் இறந்­தார். இதனால் தமிழ­கத்­தில் 2 நாளில் மழை சாவு 4–ஆக அதி­க­ரித்­துள்­ளது.

தமிழ்­நாட்­டில் வட­கி­ழக்கு பருவ மழை அக்­டோ­பர் 16 –ஆம் தேதி தொடங்­கி­யது. அதன்பி­றகு, ஒரு மாதத்­திற்­கும் மேலாகி விட்­டது. இந்த காலக்­கட்­டத்­தில் சரி­வர மழை பெய்ய வில்லை.

பரு­வ­மழை தொடங்­கிய சம­யத்­தில் குறைந்த காற்­ற­ழுத்­தம் உரு­வா­னது. இதன் கார­ண­மாக வட மாவட்­டங்­க­ளில் மட்­டும் மழை பெய்­தது. அதன்­பி­றகு, புயல் உரு­வா­னது. அது, ஆந்திரா­விற்கு சென்று விட்­டது.

புய­லுக்­குப் பின் அமைதி என்ற சொல்­லுக்கு ஏற்ப பரு­வ­மழை நீண்ட நாள் விடுப்பு எடுத்துக்­கொண்­டது. இப்­ப­டி­பட்ட நிலை­யில், கடந்த வாரம் முதல் வானி­லை­யில் மாற்­றம் ஏற்­பட்­டது.

வங்­கக் கடல் பகு­தி­யில் காற்­றின் மேல­டுக்­கில் சுழற்சி ஏற்­பட்­ட­தால், கட­லோர மாவட்டங்க­ளில் மழை பெய்ய தொடங்­கி­யது. குறிப்­பாக, தென் மாவட்­டங்­க­ளில் கடந்த சில தினங்­க­ளாக தொடர் மழை பெய்து வரு­கி­றது.

அது­வும், நேற்று முன் தினத்­தி­லி­ருந்து நெல்லை, குமரி, தென்­காசி, தூத்­துக்­குடி, இராமநாத­பு­ரம், மதுரை மற்­றும் டெல்டா மாவட்­டங்­க­ளில் கன­மழை பெய்ய தொடங்கியது.

நேற்று பக­லி­லும், இர­வி­லும் இடை­வி­டா­மல் அடை மழை போல் பெய்து வரு­கி­றது. ேநற்று காலை­யி­லும் இந்த மழை நீடித்­தது. இத­னால், பல இடங்­க­ளில் 20 செ.மீ.க்கும் மேலும் மழை பதி­வாகி உள்­ளது.

நெல்லை மாவட்­டத்­தில் மேற்கு தொடர்ச்சி மலை­யில் உள்ள நாலு­முக்கு என்ற இடத்­தில் 26 செ.மீ. மழை பெய்­துள்­ளது. ஊத்து என்ற இடத்­தில் 25 செ.மீ., காக்­காச்சி 23 செ.மீ., மாஞ்­சோலை 23 செ.மீ., மழை பதி­வா­னது. தூத்­துக்­குடி திருச்­செந்­தூர் , குல­சே­க­ரன் பட்­டி­னம் ஆகிய ஊர்­க­ளில் தலா 13 செ.மீ., மழை பதி­வா­னது. கயத்­தாறு –11 செ.மீ., காயல்­பட்­டி­னம் 10 செ.மீ., சாத்­தான்­கு­ளம் 9 செ.மீ., என்ற அள­வி­லும் மழை பெய்­துள்­ளது.

இத­னால், தாழ்­வான பகு­தி­க­ளில் தண்­ணீர் தேங்­கி­யுள்­ளது. குளங்­கள் நிரம்பி வரு­கின்­றன. தாமிர பரணி ஆற்­றில் வெள்­ளப் பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

டெல்டா மாவட்­டங்­க­ளில் அடை மழை பெய்து வரு­கி­றது. இத­னால், விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. ஏற்­க­னவே பெய்த மழை­யால் அறு­வ­டைக்கு தயா­ராக இருந்த பயிர்­கள் நாச­ம­டைந்­தன.

இப்­போது, தாளடி சாகு­படி பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இப்­போது பெய்து வரும் மழை­யால் நெல் நடவு செய்­வ­தில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் , வங்க கட­லின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் தெற்கு அந்­த­மான் பகு­தியை ஒட்டி நேற்று முன் தினம் குறைந்த காற்­ற­ழுத்­தம் உரு­வா­னது. இது மேற்கு – வட மேற்கு திசை­யில் நகர்ந்து படி­ப­டி­யாக வலு­வ­டைந்து வரு­கி­றது.

அடுத்த 24 மணி­நே­ரத்­திற்­குள் காற்­ற­ழுத்த தாழ்வு மண்­ட­ல­மாக வலு­வ­டை­யும் என்­றும், அதற்கு அடுத்த 48 மணி நேரத்­தில் புய­லாக மாறும் கணிக்­கப்­பட்­டுள்­ளது. புய­லாக உருவெ­டுத்­தால், அதற்கு சென்­யார் என்று பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது­வும் தமி­ழ­கத்தை நோக்­கியே நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இதன்­மூ­லம், வட தமிழ்­நாட்­டில் இனி வரும் நாட்­க­ளில் கன­ம­ழையை எதிர்­பார்க்­க­லாம்.

இப்­ப­டி­பட்ட நிலை­யில், வங்க கட­லில் இலங்­கைக்கு அருகே நேற்று இன்­னொரு குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வு நிலை உரு­வாக வாய்ப்­புள்­ளது என்று அகில இந்­திய வானிலை இலாகா தெரி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக தென் மாவட்­டங்­க­ளில் கன­மழை நீடிக்­கும்.

இப்­ப­டி­பட்ட நிலை­யில் தமிழ்­நாட்­டிற்கு நேற்று மிக கன­ம­ழைக்­கான ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ளது.இத­னால், பல இடங்­க­ளில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்­யும் வாய்ப்­புள்­ளது. ேநற்று கன­மழை கார­ண­மாக 17 மாவட்­டங்­க­ளில் பள்­ளி­க­ளுக்­கும் விடுமுறை அறி­விக்­கப்­பட்­டது.

மின்­சா­ரம் தாக்கி சாவு

இது ஒரு­பு­றம் இருக்க தமிழ்­நாட்­டில் 2 நாளில் மழைக்கு 4 பேர் பலி­யாகி உள்­ளார்­கள். நேற்று கட­லூர் மாவட்­டம் சிதம்­ப­ரம் அருகே உள்ள சாத்­த­மங்­க­லம் என்ற கிரா­மத்­தில் கன­ம­ழை­யால் புளி­ய­ம­ரம் ஒன்று சாய்ந்­தது. இது ஒரு வீட்­டின் மீது விழுந்­தது. அத­னால் மின் கம்­பி­கள் அறுந்­தன.

அப்­போது மின்­சா­ரம் தாக்கி மரி­ய­சூசை (வயது 70), அவ­ரது மனைவி அந்­தோணி பிள­வுன் மேரி (வயது 60), அவ­ரது உற­வி­னர் வன­தாஸ் மேரி (வயது 70) ஆகிய 3 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்த நிலை­யில் நேற்று தூத்­துக்­கு­டி­யில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். அவ­ரது பெயர் பழனியாண்டி (வயது 75). தூத்­துக்­குடி கணேஷ் நகர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர். ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் காவ­லா­ளி­யாக வேலை செய்து வந்­தார். நேற்று அதி­கா­லை­யில் நடை­ப­யிற்சி மேற்­கொண்­ட­போது மழை­யால் மின்­க­சிவு ஏற்­பட்டு, அந்த மின்­சா­ரம் தாக்கி அவர் உயிரிழந்­தார்.