இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்திய திரையுலகின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் சுராஜ் கொடுத்துள்ளார்.

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படத்தில் சுராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ், ஜெயிலர் 2 திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படம் ஜெயிலர் படத்தை விட சிறப்பாக இருக்கும். எனக்கு நீண்ட காலமாக ரஜினி சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றவே வாய்ப்பு கிடைத்து. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினி சார் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர் என்றார்.