வித் லவ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவான இப்படம், முதல் 10 நாள்களில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், வித் லவ் திரைப்படம் வரும் 6 -ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.