மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதட்டம் காரணமாக துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் டி 20 உலக கோப்பை தொடரில் பங்கேற்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தங்களது சொந்த நாட்டிற்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணியினர் போட்டிகளை முடித்து விட்டு துபாய் வழியாக ஹராரே திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் தற்போது டெல்லியில் தங்கியுள்ளனர்.