தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் மாநில பொது செயலாளர் சமய செல்வம் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாண்டிச்சேரியில் தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் வல்லத்தரசு, துணை செயலாளர் முருகேசன், செய்தி தொடர்பாளர் அஜீத் குமார், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில ஆலோசகர் ரமேஸ் கண்ணா, செயற்குழு உறுப்பினர்கள் நாகேந்திரன், திருசிற்றம்பலம்: உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.
நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்
November 24, 2025
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts