சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் தாய் கிழவி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி படம் வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.

இந்நிலையில் தாய் கிழவி படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.