மதுரை இர­யில்வே கோட்ட மேலா­ளரை நேரில் சந்­தித்து தென்­காசி மாவட்­டம் கடை­ய­நல்­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தி.மு.இரா­சேந்­தி­ரன் கிராம மக்­கள் பயன்­பெ­றும் வகை­யில் பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி நேரில் மனு கொடுத்­துள்­ளார்.


அந்­தக் கோரிக்கை மனு­வில் அவர் கூறி இருப்­ப­தா­வது.


வண்டி எண் 16101/16102 தாம்­ப­ரம் – கொல்­லம் தாம்­ப­ரம் விரைவு இர­யிலை பக­வ­தி­பு­ரம் இர­யில் நிலை­யத்­தில் நின்று செல்ல நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். கடை­ய­நல்­லூர் தென்­காசி இர­யில் நிலை­யங்­க­ளுக்­கி­டையே மீட்­டர் கேஜ் காலம் தொட்டு இயங்­கி­வந்த நயி­னா­ர­க­ரம் இர­யில் நிலை­யத்தை மீண்­டும் புன­ர­மைத்து அத­னைச் சுற்­றி­யுள்ள கிராம மக்­கள் பயன்­பெ­றும் வகை­யில் மீண்­டும் செயல்­பட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.


திரு­நெல்­வே­லி­யி­லி­ருந்து தென்­காசி, கடை­ய­நல்­லூர், இரா­ஜ­பா­ளை­யம் மதுரை, கரூர், சேலம் வழி­யாக பெங்­க­ளூ­ருக்கு தின­சரி இர­யில் சேவையை துவங்க வேண்­டும். வாரம் ஒரு­முறை செல்­லும் திரு­நெல்­வேலி – மேட்­டுப்­பா­ளை­யம் (வழி–­க­டை­ய­நல்­லூர்) வாராந்­திர இர­யில் சேவையை தின­சரி இர­யில் சேவை­யாக மாற்ற வேண்­டும். மீட்­டர்­கேஜ் காலத்­தில் தென்­காசி – செங்­கோட்டை பக­வ­தி­பு­ரம் வழி­யாக இயங்­கிய நெல்லை கொல்­லம் பகல் நேர பய­ணி­கள் இர­யிலை மீண்­டும் இயக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.


வண்டி எண் 20681/20682 சிலம்பு எக்ஸ்­பி­ரஸ் மற்­றும் வண்டி எண் 20683/20684 தாம்­ப­ரம் செங்­கோட்டை எக்ஸ்­பி­ரஸ் ஆகிய இர­யில்­களை வாரத்­திற்கு மூன்று நாட்­கள் இயக்­கப்­ப­டு­வதை தின­சரி இர­யில்­க­ளாக மாற்றி இயக்க வேண்­டும்.வண்டி எண் 16721/16722 கோயம்­புத்­தூர் மதுரை இடையே இயக்­கப்­ப­டும் இண்­டர்­சிட்டி எக்ஸ்­பி­ரஸை இரா­ஜ­பா­ளை­யம், கடை­ய­நல்­லூர், தென்­காசி வழி­யாக செங்­கோட்டை வரை நீட்­டிப்பு செய்ய வேண்­டும்.பய­ணி­கள் வச­திக்­கா­க­வும், கூடு­தல் இர­யில்­களை இயக்க வச­தி­யா­க­வும் செங்­கோட்டை இர­யில் நிலை­யத்­தில் ஐந்­தா­வது பிளாட் பாரம் அமைக்­கும் பணியை விரை­வில் தொடங்கநட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். பய­ணி­க­ளின் வச­திக்­கா­க­வும், இர­யில் பெட்­டி­களை திறம்­பட கையா­ள­வும் செங்­கோட்டை இர­யில் நிலை­யத்­தில் உள்ள 5 மற்­றும் 6வது இர­யில்வே வழித்­த­டத்தை மேற்­குப் பகு­தி­யு­டன் இணைக்க வேண்­டும்.இர­யில்­களை விரை­வாக இயக்­க­வும், பொது­மக்­க­ளில் பயண நேரத்தை மிச்­சப்­ப­டுத்­த ­வும், தென்­காசி – செங்­கோட்டை இடையே உள்ள 8 கிலோ மீட்­டர் இர­யில் வழித்­த­டத்தை இரட்டை இர­யில் வழிப்­பா­தை­யாக மாற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.


செங்­கோட்டை இர­யில் நிலை­யத்­தில் 4 மற்­றும் 5 வது பிளாட் பாரத்­தில் இறங்­கும் முதி­ய­வர்­கள், குழந்­தை­கள்,கர்ப்­பிணி பெண்­கள் வச­திக்­காக தானி­யங்கி வசதி (லிப்ட்) ஏற்­ப­டுத்­திட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். செங்­கோட்டை மற்­றும் கடை­ய­நல்­லூர் இர­யில் நிலை­யங்­களை அம்­ரித் பாரத் திட்­டத்­தின்­கீழ் உட்­கட்­ட­மைப்பை நவீ­னப்­ப­டுத்தி பய­ணி­க­ளின் நலனை பாது­காக்­க­வும், பய­ணி­க­ளுக்கு சிறந்த சேவையை வழங்­க­வும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.


கடை­ய­நல்­லூர் மற்­றும் செங்­கோட்­டை­யில் இர­யில் நிலை­ யங்­க­ளில் கோச் விப­ரத்­தினை டிஜிட்­டல் ஒளி முறை­யில் பய­ணி­க­ளுக்கு கோச் எண்­கள் தெளி­வாக தெரி­யு­மாறு அமைத்­தி­டல் வேண்­டும்.என தெரி­வித்­துள்­ளார். மனுவை பெற்­றுக் கொண்ட இர­யில்வே கோட்ட மேலா­ளர் விரை­வில் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­தார்.