இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்,

உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், மின்கம்பம் இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மின்கம்ப இடமாற்றப் பணிகளை அமைச்சர் . . லோகேஷ் தமிழ்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.