புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் மற்றும் இராஜகோபாலபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களைச் சந்தித்தார்.

இன்னும் சில தினங்களில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசுகள் மற்றும் வெடிகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பட்டாசு வெடிக்கும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் முதியவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் சுப சரவணன், இராமலிங்கம், ராஜேந்திரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.