புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் உதவி புவியியலாளர்களாக பணியாற்றி வந்த 5 அலுவலர்களுக்கு, ‘உதவி இயக்குநர்’ பதவி உயர்வுக்கான ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு வழங்கினார்கள். மேலும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுக்கு அமைச்சர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். துறையின் செயல்பாடுகளை சிறப்பாகவும் திறம்படவும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு,புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் மரு.த. பிரபுசங்கர், மற்றும் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.