தமிழகத்தில் சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் மற்றும் அரிசி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . அமுதா, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுக் காவல் துறைத் தலைவர் சந்தோஷ் குமார், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்

. லதா, ., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அஜய் யாதவ், மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, அரிசி விலை நிலவரம் மற்றும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அரிசி கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.