சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இதில், 2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் பணிகள், அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்.குமரகுருபரன், வணிகவரித் துறை ஆணையர் எஸ். நாகராஜன், மற்றும் வணிகவரித் துறை உயர் அலுவலர்கள், அனைத்து இணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.