ஐத​ரா​பாத் மெட்​ரோ ரயில் நிறு​வனம் நாட்​டின் மிகப்​பெரிய மற்​றும் மிக​வும் மேம்​படுத்​தப்​பட்ட நகர்ப்​புற போக்​கு​வரத்து சேவை அமைப்​பாக உள்​ளது. 57 நிறுத்​தங்களை உள்​ளடக்​கிய 3 வழித்தடங்​களில் ஐத​ரா​பாத் மெட்​ரோ ரயில் சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது. தின​மும் 5 லட்​சம் பேர் ஹைத​ரா​பாத் மெட்​ரோ ரயில்​களில் பயணிக்​கின்​றனர்.

இந்த நிலை​யில் பயணி​கள் அதி​லும் குறிப்​பாக பெண் பயணி​களின் பாது​காப்​புக்​காக ஐதரா​பாத் மெட்​ரோ 20 திருநங்​கைகளை தேர்வு செய்து அவர்​களுக்கு தேவை​யான பயிற்​சிகளை அளித்து பாது​காப்பு பணி​யில் இணைத்​துக்​கொண்​டுள்​ளது. இதன் மூலம், திருநங்​கைகளுக்கு சமூக அதி​காரமளித்​தல் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளதுடன், பயணி​கள் பாது​காப்​பும் மேம்​படும் என்று ஐதராபாத் மெட்​ரோ தெரி​வித்​துள்​ளது.