ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற சர்வதேச சுரங்கம் மற்றும் வளங்கள் மாநாடு மற்றும் கண்காட்சியில் (IMARC 2026) தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு பங்கேற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, சிட்னியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் (International Convention Centre) நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்ற அவர், சர்வதேச அளவில் சுரங்கத் தொழில், கனிம வள மேலாண்மை, நவீன தொழில்நுட்பங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.

உலக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சுரங்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் கனிம வள மேலாண்மை தொடர்பான அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் இம்மாநாடு சிறந்த தளமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில், மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அவற்றை முறையாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதுடன், நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தி மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு தெரிவித்துள்ளார்.