சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஆகஸ்ட் 24), தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 15,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, 1,20,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின், தங்கம் கிராம் 15,000 ரூபாயையும், சவரன் 1.20 லட்சம் ரூபாயையும் தாண்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 275 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.