பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணா மா விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிய தொடங்கி உள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டவுடன் பா.ஜ.க வட்டாரம் சுறுசுறுப்பு அடைந்தது. தமிழகத்தில் அண்ணாமலை நடத்திய நடைபயணம் உள்பட பல்வேறு அதிரடி அரசியல் நடவடிக்கைகளால் திமுக உள்பட பல்வேறு கட்சிகள் கலக்கம் அடைந்தன. தி.மு.க. அமைச்சர்கள் சிலர் மீதான ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட போது தி.மு.க.வில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பா.ஜ.க.அசுர வளர்ச்சி அடைந்தது. இதற்கிடையே கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பாத அண்ணாமலை பா.ஜ.க.வை தனித்து போட்டியிட வைத்தார். இதனால் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை 18 சதவீதமாக உயர்த்தி தனது பலத்தை நிரூப்பித்தார்.

இந்திலையில் அண்ணாமலைக்கு பதிலாக தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனத்தின் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதை நிரூபிக்கின்ற வகையில் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.வில் தனது விசுவாசிகளை முக்கிய பொறுப்பில் நியமித்தார். மேலும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கட்சி பதவிகள் மறுத்து ஒரங்கட்டப்பட்ட நிலை ஏற்பட்டது. மேலும் தேசிய அளவில் அண்ணாமலைக்கு பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் எவ்வித முடிவையும் எட்டவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வருகின்ற சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்ய அண்ணாமலை முன்வரவில்லை. அவருடைய பிரச்சாரத்தை அ.தி.மு.க. விரும்பவில்லை..

இதனால் மனம் வெறுத்து போன அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் ரஜினிகாந்தை ரகசியமாக சந்திந்து புதிய கட்சி தொடங்க ஆதரவு தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அங்கு ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. இந்திலையில் அண்ணாமலையின் அன்பு கூட்டம் என்ற பெயரில் அவருடைய ஆதரவாளர்கள் சிலர் தொடங்கி உள்ளது. இந்த செயல் பா.ஜ.க.வின் மேலடத்துக்கு சென்று உள்ளதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக கோபமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலைக்கு கட்சியில் எவ்வித முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது.

எனவே அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மத்தியில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.