மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தவெக செயலாளருமான SOP. விஜய் மகாலிங்கம், எழுமலை பேரூராட்சிக் கழகத்திற்குட்பட்ட எம். கல்லுப்பட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து தீபாவளி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


அப்போது, மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களும், குடும்ப உறுப்பினர்களுக்குப் புத்தாடைகளும் வழங்கினார். மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புதிய சீருடைகள், கல்வி உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கி மகிழ்ந்தார்.


தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மலைவாழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவர்களுடன் கலந்துரையாடி தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.


இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பாண்டியராஜன், தனசேகரன், சாந்தினி குருராமராஜ் மற்றும் உள்ளாட்சி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட தவெகவினர் பலர் கலந்து கொண்டனர்.