புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலையப்ப நகர் பகுதியில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் கசிந்து வருவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாகத் தொடர்புகொண்டு கழிவுநீர் கசிவைச் சீரமைக்க உத்தரவிட்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, அப்பகுதிக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் சிரமத்தைப் போக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் மகேந்திரன், திமுக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.