மதுரை அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக வைபவம் வரும் 17.09.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🚫 வாகனப் போக்குவரத்துக்குத் தடை (Zero Parking Zone)

  1. வரும் 16.09.2026 இரவு முதல் 17.09.2026 இரவு வரை சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகள் அனைத்திலும் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு 'Zero Parking Zone' ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த வீதிகளில் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  3. 16.09.2026 இரவு 10:00 மணி முதல் 17.09.2026 இரவு 10:00 மணி வரை கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மதுரை நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

🚶‍♂️ பக்தர்கள் நடந்து சென்று கோபுர தரிசனம் செய்யும் வழித்தடங்கள்

பக்தர்கள் 4 கோபுரங்கள் வழியாக தரிசனம் செய்ய பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன:

  1. கிழக்கு கோபுரம்: யானைக்கல் சந்திப்பு ➔ கீழமாசி வீதி ➔ சுவாமி சன்னதி தெரு / வெங்கலக்கடை தெரு ➔ கீழ ஆவணி மூலவீதி ➔ கீழ சித்திரை வீதி.
  2. தெற்கு கோபுரம்: கீழவாசல் / வாசன் சந்திப்பு ➔ விளக்குத்தூண் ➔ தெற்கு மாசி வீதி ➔ மறவர் சாவடி ➔ தொடியன் கிணற்று சந்து ➔ தெற்கு ஆவணி மூலவீதி ➔ தெற்கு சித்திரை வீதி.
  3. வடக்கு கோபுரம்: பழைய டி.வி.எஸ் (Old TVs) ➔ வடக்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பு ➔ வடுக காவல் கூட தெரு ➔ தானப்ப முதலி தெரு ➔ வடக்கு ஆவணி மூலவீதி ➔ வடக்கு சித்திரை வீதி.
  4. மேற்கு கோபுரம்: நேதாஜி ரோடு / டவுன்ஹால் ரோடு ➔ மேலமாசி வீதி ➔ மேல ஆவணி மூலவீதி ➔ மேற்கு சித்திரை வீதி.
  5. ரயில் பயணிகள்: மதுரை ரயில் நிலையத்திலிருந்து டவுன்ஹால் ரோடு ➔ மே-பிளவர் சந்திப்பு ➔ மேல ஆவணி மூலவீதி வழியாகக் கோவில் வளாகத்தை அடையலாம்.

🅿️ மாவட்ட வாரியாக தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் (Parking)

வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்களுக்காக பிரத்யேக பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன:

  1. சிவகங்கை, திருச்சி, இராமநாதபுரம்: விராகனூர் சுற்றுச்சாலை ➔ வைகை தென்கரை சாலை.
  2. விருதுநகர், திருமங்கலம்: தமிழ்நாடு பாலிடெக்னிக், மதுரை கல்லூரி, திருநகர் காவல் நிலையம் எதிரே மற்றும் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பலஅடுக்கு வாகன காப்பகம்.
  3. தேனி, திண்டுக்கல்: காளவாசல் பைபாஸ் ரோடு, பழைய RTO அலுவலகம் அருகில், அரவிந்த் மீரா பள்ளி சாலை, எல்லீஸ் நகர் பகுதி.
  4. நத்தம், அலங்காநல்லூர், அழகர்கோவில், மேலூர்: தமுக்கம் மைதானம், காந்தி அருங்காட்சியகம், மீனாட்சி கல்லூரி வளாகம், அமெரிக்கன் கல்லூரி மைதானம்.

🚌 தற்காலிக பேருந்து நிலையங்கள்

நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகளுக்காக 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன:

  1. C2 ரவுண்டானா
  2. எல்லீஸ் நகர்
  3. TB ரோடு (வெஸ்டன் பார்க் ஹோட்டல் அருகில்)
  4. அண்ணா பேருந்து நிலையம்
  5. தெப்பக்குளம்

🚨 அவசரகால பாதுகாக்கப்பட்ட வீதிகள் (Sterile Zone)

ஆம்புலன்ஸ் (108) மற்றும் தீயணைப்பு வாகனங்களின் அவசரத் தேவைக்காகப் பின்வரும் வீதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (Sterile Zone) மாற்றப்பட்டுள்ளன:

  1. தளவாய் தெரு, 2) சென்ட்ரல் மார்க்கெட் தெரு, 3) தெற்கு காவல் கூட தெரு, 4) அன்னகுழி மண்டபம் தெரு. இந்தப் பாதைகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ அனுமதி கிடையாது.

📣 காவல் துறையின் வேண்டுகோள்

கும்பாபிஷேக விழா எவ்வித சிரமமுமின்றி சிறப்பாக நடைபெற பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மதுரை மாநகர காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.