மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கத்தை, மதுரை மாவட்ட தவெக நிர்வாகி தமிழ்ச்செல்வி சுகப்பிரியா மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது, தமிழ்ச்செல்வி சுகப்பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் எம்எல்ஏ விஜய் மகாலிங்கத்துக்கு நினைவுப் பரிசு மற்றும் வாழ்த்துகளை வழங்கினர். இதேபோல், செல்லம்பட்டி ஒன்றிய தவெக நிர்வாகிகளான எம்.வி.பி. ராஜா, ரகு பண்ணபாலன், எஸ்.கே.பி. அமைதி உள்ளிட்டோர் எம்எல்ஏ விஜய் மகாலிங்கத்துக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் புத்தாடைகள் மற்றும் தீபாவளிப் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.