தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எவ்வித விபத்துகளுமின்றியும் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், தீயணைப்புத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தீ விபத்துகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அவசர கால மீட்புப் பணிகளுக்கான தயார் நிலை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், தீபாவளி நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அவசர அழைப்புகள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் தீயணைப்புத் துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தனர்.