பாகிஸ்​தானின் இஸ்​லா​மா​பாத் ஐகோர்டிடல் தாரிக் மஹ்மூத் ஜஹாங்​கிரி என்​பவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நீதிப​தி​யாக நியமனம் செய்யப்பட்டார். இந்​நிலை​யில் இவரது சட்​டப் படிப்பு சான்​றிதழ் போலி​யானது என கடந்​தாண்டு புகார் வந்​தது. இதையடுத்து இவர் நீதிபதியாக பணி​யாற்ற தடைவிதிக்கப்பட்டு, அசல் சட்​டப் படிப்பு சான்​றிதழ்​களைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்​டது. ஆனால் அவர் சான்​றிதழ்​களை சமர்ப்​பிக்​காமல், அவரது வழக்கை கூடு​தல் நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வு விசா​ரிக்க வேண்​டும் என மனுத்​தாக்​கல் செய்​தார். இதையடுத்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உத்தர ​விடப்​பட்​டது.

இதையடுத்து கராச்சி பல்​கலைக்​ கழக பதி​வாளர் ஆவணங்​களை சமர்ப்​பித்​தார். அதில் தாரிக் மஹ்மூத் ஜஹாங்​கிரி சட்​டப் படிப்பு சான்​றிதழ் போலி​யானது என தெரிவிக்​கப்​பட்​டது. மேலும் இவர் கடந்த 1988-ம் ஆண்டு தேர்வு எழுதும் ​போது ஆள்​மாறாட்​டம் செய்து பிடிபட்​ட​வர் எனவும் தெரிவிக்​கப்​பட்​டது. ஆனால், இவர் இந்த தண்​டனையை ஏற்​காமல், அடுத்​தாண்​டே, இம்​தி​யாஸ் அகமது என்ற மாணவனின் பதிவு எண்ணை பயன்படுத்தி தேர்​வெழு​தி​யுள்​ளதும் தெரியவந்தது. இதையடுத்து இஸ்​லா​மா​பாத் ஐகோர்ட் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்​பில் தா​ரிக் மஹ்மூத் ஜஹாங்​கிரியை நீதிபதி பத​வி​யில் இருந்து நீக்​கி உத்தரவு பிறப்​பித்​தது.