சென்னை: யாராவது ஹீலிங் கொடுக்க வந்தால் செருப்பின் ஹீல்ஸாலேயே அடித்து விரட்டுங்கள் என்று நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி மோகன் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி ஆர்த்தியை பிரிந்த பிறகு தெரபிக்காக கெனிஷா பிரான்சிஸை அணுகியதாக தெரிவித்தார் ரவி மோகன். ஹீலிங் செய்த கெனிஷாவை தன் தோழி என்றார் . பின்னர் அவரை கம்பானியன் என பாராட்டினார் ரவி. இந்நிலையில் ஆர்த்தி ரவி, இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஹை ஹீல் புகைப்படத்துடன் கூறியிருப்பதாவது, ‘‘எவளாச்சும் உன்ன ஹீல் பண்றேனு வந்தா... ஹீல்ஸாலேயே (ஹீல்ஸ் செருப்பு) அடிச்சு துரத்திவிடு’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆர்த்தி என்னவோ யார் பெயரையும் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் அதை பார்த்த சினிமா ரசிகர்களோ, ஹீலிங் என்கிற வார்த்தையை பார்த்ததுமே கெனிஷா பிரான்சிஸ் நினைவு தான் வருகிறது. அவர் தானே ஹீல் பண்ணுகிறேன் என ரவி மோகன் வாழ்க்கையில் வந்தார். கெனிஷா செய்ததை மனதில் வைத்தே ஆர்த்தி இப்படி ஒரு மெசேஜ் போட்டிருக்கிறார் என்று பேசுகிறார்கள்.