புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளை உடனடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
பொதுமக்களின் குறைகளுக்கு நேரடியாகச் செவிசாய்த்து, அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்ட எம்எல்ஏ டாக்டர் முத்துராஜாவின் இந்தச் செயல்பாடு கவனம் பெற்றுள்ளது.