ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார். இதில் காங்கோ, ருவாண்டா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.