நாட்டின் ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை காட்டிலும் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ. 2.11 லட்சம் கோடியைத் தாண்டியது.
உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதிகள் மூலம் கிடைத்த அதிக வசூல் காரணமாக, ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை காட்டிலும் 15.4 சதவீதம் அதிகரித்து ரூ. 2.11 லட்சம் கோடியை எட்டியது. இதில், சிஜிஎஸ்டி ரூ. 39,835 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 47,881 கோடி ஐஜிஎஸ்டி ரூ. 1.23 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
ஜூலை 2025ல் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.83 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மாதம் ரூ. 1.95 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ஜூலை மாதம் 2.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,391 கோடி பங்கு வழங்கப்பட்டு உள்ளது. நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.