திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஆஜராகி கையெழுத்திட்டார்.

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட செந்தில் பாலாஜி இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 1ஆம் தேதி) மீண்டும் வந்தார். தினமும் இருவேளை செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு வந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வழக்கை அடுத்து இரண்டு நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார் செந்தில் பாலாஜி.

டாஸ்மாக் விவகாரம் மற்றும் முந்தைய வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாகக் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி கையெழுத்து இட்டனர்.