மதுரை (27.08.2026): உலக சுற்றுலா தினம் 2026-ஐ முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்க தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கௌரவிக்கும் வகையில் பின்வரும் 13 முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன:

  1. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)
  2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)
  3. சிறந்த பயண பங்குதாரர் (பாரம்பரியம், கிராமப்புறம், பண்ணை சுற்றுலா, சாகச சுற்றுலா ஆகிய பிரிவுகள்)
  4. சிறந்த தங்குமிடம் (Best Accommodation)
  5. சிறந்த உணவகம் (Best Restaurant)
  6. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர செயல்பாட்டாளர் (தங்குமிடம் மற்றும் படகு இல்லம்)
  7. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம்
  8. சுத்தமான சுற்றுலாத்தலம் (Cleanest Tourism Destination)
  9. பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)
  10. சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம்
  11. சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர்
  12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)
  13. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி: மேற்கண்ட பிரிவுகளில் தகுதியும் விருப்பமும் உள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத் தொழில் முனைவோர்கள், www.tntourismawards.com என்ற இணையதள முகவரியில் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 30.09.2026 ஆகும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தெரிவித்துள்ளார்.