மதுரை, அக். 21:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என். வல்லரசு அவர்களின் 25-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (21.10.2026) அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம், பி.ஏ., பி.எல்., கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என். வல்லரசு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியையும் விஜய் மகாலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.