அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தியதாக அவர் கூறினார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது,

நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன். நீங்கள் ஒரு கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைன் - ரஷ்யா போரை மட்டுமே இதுவரை என்னால் நிறுத்த முடியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.