சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கு விற்பனை செய்யப்படுகிறது.