சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஆகஸ்ட் 19) காலை, தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து, 14,205 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 680 ரூபாய் சரிவடைந்து, 1,13,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 195 ரூபாய் உயர்ந்து, 14,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,560 ரூபாய் அதிகரித்து, 1,15,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, தங்கம் சவரனுக்கு, 880 ரூபாய் உயர்ந்தது.வெள்ளி கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 260 ரூபாய்க்கும் , கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.