டெல்லி: கடந்த 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடைய முன்னாள் எம்.பி. மரணம் சஞ்ஞன்குமார் இன்று காலமானார்.

சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான 1984ஆம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் ஈடுபட்டதற்காகக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன்குமார் (80), டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார். திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர், அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவர் தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், 1984 கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கிலும் 2025ஆம் ஆண்டு சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், சஜ்ஜன் குமார் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.