அம்பத்தூர் தொழில்பேட்டை பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் ரூ11.81 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்று இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இங்கு பல ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி பேருந்துபயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த கோரி அம்பத்தூர் எம். எல் .ஏ. ஜோசப் சாமுவேல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.11.81 கோடி மதிப்பிட்டில்அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் பிறகு அங்கு 11 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள்,பல்பொருள் அங்காடிங்கள், உணவருந்தும் கூடம், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு அறைகள், ஏடிஎம் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுமார் 26, 346 சதுரடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்தை நேற்று காலை தமிழகதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு,சென்னை மேயர் பிரியா அம்பத்தூர்சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, வீட்டு வசதி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காக்கர் லா உஷா, போக்குவரத்து துறை செயலாளர் சிரு,சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ்,முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகர போக்குவரத்து துறை இயக்குனர் பிரபுசங்கர்,வட்டார துணை ஆணையர் கவுஷிக் மற்றும் 7–வது மண்டல குழுத்தலைவர் பி.கே.மூர்த்தி, திமுக பகுதிச் செயலாளர்கள் எம்.டி.ஆர்.நாகராஜ், டி.எஸ்.பி.ராஜகோபால் மற்றும்பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.