மதுரை, செப். 20-
மதுரை மாநகராட்சி மண்டல, வார்டுகளில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பல ஆண்டுகளாக இடமாற்றம் கேட்டும் பிரதான அலுவலத்திற்குள் நுழைய முடியவில்லை. இதன் பின்னணியில் உள்ள சில அலுவலர்களின் ‘அரசியலை’ கமிஷனர் கவுரவ் குமார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளிலும், மண்டலங்கள், வார்டுகள் அலுவலகங்களிலும் நிரந்தர, தற்காலிகம் என 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். பிரதான அலுவலகத்தின் பெரும்பாலான பிரிவுகளில் ஒப்பந்த பணியாளர்களே அதிகம் உள்ளனர். ஆபீஸ் அசிஸ்டெண்ட்டுகள் (ஓ.ஏ.,க்கள்) உட்பட நிரந்தர பணியாளர்கள் பெரும்பாலும் மண்டல, வார்டுகளில் பல ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். பிரதான அலுவலகத்திற்கு இடமாற்றம் கேட்டும் கிடைப்பதில்லை. இதன் பின்னணியில் சில அலுவலர்களின் ‘அரசியல்’ உள்ளது என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
அவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு பிரிவிலும் ஓ.ஏ.,க்கள் பணி முக்கியமானது. 40க்கும் மேற்பட்ட நிரந்தர ஓ.ஏ.,க்கள் இருந்தும் பெரும்பாலும் மண்டல, வார்டு அலுவலகங்களில் தான் பணியில் உள்ளனர். முக்கிய பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையிலான ஓ.ஏ.,க்களே உள்ளனர். சில பிரிவுகளில் 10 ஆண்டுகளாக கூட இருக்கின்றனர்.
பிரிவு பொறுப்பாளர்கள் சொல்வதை அவர்கள் தட்டாமல் கேட்பதால் எங்களை போன்ற ரெகுலர் ஓ.ஏ.,க்களை பிரதான வளாகத்திற்குள் விடுவதில்லை. நாங்கள் இருந்தால் கேள்வி கேட்போம். அது அவர்களுக்கு சிரமங்களை’ ஏற்படுத்தும். அதனால் எங்களை நுழைய விடாமல் ‘அரசியல்’ செய்கிறார்கள்.
மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகராட்சி ஆணையாளர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் என பொது
மக்களும், சமூக ஆர்வலர்க
ளும் பாராட்டினார்கள்.
மதுரை நகரில் ஆங்காங்கே குடிநீர் தொட்டி, சிறுநீர் கழிப்பிடம் மற்றும் சுகாதாரப்பணி
யாளர்கள் கடுமையாக பணியாற்றினர். இதனால் கும்பாபிஷேகத்திற்கு வந்த பொதுமக்கள், பக்தர்கள் அனைவருமே முகம் சுளிக்காமல் சென்றார்கள். மேலும் மதுரை நகரில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்கு ஏற்பட்ட கழிவுகளை உடனுக்குடன் சுத்தம் செய்து மதுரை நகரில் லட்சம் பேர் கூடிய இடத்தில் அசுத்தம் என்ற ஒரு சுவடு கூட தெரியாதவாறு நிர்வாகம் நன்றாக செயல்பட்டது. ஆனால் இதற்கு திருஷ்டி வைத்தது போல் ஆணையாளருக்கு தெரியாமல் மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குபட்ட பகுதியில் மீனாட்சியம்மன் கோவில் இருப்பதால் மத்திய மண்டலம் சிறப்பாக செயல்பட்டது. இந்த பகுதியில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிஸ்கட், தண்ணீர் பாட்டில், ஜூஸ் வழங்கப்பட்டது.
இந்த மாநகராட்சி மத்திய மண்டலத்தில் ஆங்காங்கே கோவிலைச் சுற்றி பாதாள அடைப்புகள் ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறியது. இதை உடனுக்குடன் நகர பொறியாளர் பிரிவினர் சரி செய்தனர்.
மேலும் சாலைப்பணிகளுக்கு டெண்டர் விட்டதில் பல குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை முன்னாள் அமைச்சரின் கைப்பாவையாக இருந்த அருள் என்பவர் வடநாட்டு பெயரில் தெரியாமல் ஒப்பந்தம் எடுத்து புதிய ஒப்பந்ததாரர்கள் போல செயல்பட்டார். இவை அனைத்திற்கும் மத்திய மண்டலத்தில் உதவி செயற்பொறியாளராக இருக்கும் முத்து என்பவர் உடந்தையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒப்பந்தம் இவருக்கு எப்படி வழங்கப்பட்டது? ஆணையாளருக்கு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என நகர பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளே புலம்புகின்றனர்.