மதுரை, செப்.20-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. ஏரானமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இரவில் மீனாட்சி அம்மன், சுந்தரே சுவரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் நேற்று தொடங்கின. இந்த பூஜைகள் அக்டோபர் 2-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நவராத்திரி விழா
பொதுவாக மண்டல பூஜை 48 நாட்கள் நடத்துவது வழக்கம். ஆனால் மீனாட்சி அம்மன் கோவி லில் நவராத்திரி திருவிழா தொடங்க இருப்பதால் 15 நாட்கள் கொண்டதாக மண்டல பூஜையை நடத்துகிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று தரிசிக்க கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (21-ந் தேதி) வரை சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரி கள் சக்திவேல், கோட்டைக் குமார் தலைமையில் ஒவ் வொரு நாளும் தாசில்தார், முதுநிலை வருவாய் அதிகாரி என சிறப்பு அதிகாரிகள் காலை, முதல் இரவு வரை பணியில் இருப்பார்கள் என் றும், கோவில் கட்டுப்பாட்டு அறை, வெளிப்பகுதி. அம் மன், சுவாமி சன்னதிகளுக்கு பக்தர்கள் செல்லும்வழி மற் றும் திரும்பும் வழிகளில் இந்த அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என கலெ
க்டர் நிஷாந்த்கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கட்டண தரிசனம் கிடையாது
நேற்றும், இன்றும் கட்டண தரிசனம் கிடையாது என்றும், சிறப்பு தரிசனத்திற்கும் அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.