சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதல்வர் விஜய் ஆட்சி குறித்த கேள்வியை தவிர்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் வெளியேறினார்.

அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஜெயிலர் 2 படம் முடிந்து விட்டது. தற்போது தர்மன் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்றார். தொடர்ந்து முதல்வர் விஜய்யின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் நன்றி என்று கூறி சிரித்து விட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட்டார்.