மதுரை - சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கோனார்பட்டி ஊராட்சியில் கோனார்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ தானியமாரியம்மன் திருக்கோயில் மஹா அஷ்டபந்தன கும்பாபிசேகம் கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது,
தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது, தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றன இதில் கோனார்பட்டி உட்பட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் விழா திருப்பணி குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்