மதுரையில் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை நடத்திய சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் கேகே நகர் ஆவின் சந்திப்பு ஆகியவற்றை கடந்து மீண்டும் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் முத்துக்குமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நடிகரும் இயக்குநருமான சங்கரபாண்டி, நடிகரும் இயக்குநருமான ராஜபாண்டி, காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தானை சிறப்பித்தனர். அவர்கள் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தியதுடன், சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியையும் பாராட்டினர்.



செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜோசப் அருண் பிரசாத், பொது மேலாளர் டாக்டர்.சாம் சர்வின், தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தைச் சார்ந்த முகில் கணேசன், சகாய மாதா முதியோர் இல்லத்தின் உரிமையாளர் தியாகராஜன், டோக் பெருமாட்டி கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் எஸ்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சுமார் 600க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். சர்க்கரை நோய் தொடர்பாக முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, இதய நோயாளிகளுக்கான உடனடி பாதுகாப்பு சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்தி வரும் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை முதல்முறையாக சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு வலியுறுத்தி இந்த மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்