புதுடெல்லி: உள்​நாட்​டில் வெங்காய விலை மீண்​டும் உயர்ந்து வரும் சூழலில், அதன் விலை​யைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில் முக்​கிய நகரங்​களுக்கு வெங்காயத்தை விரை​வாக எடுத்​துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்​களை மத்​திய அரசு நேற்று முதல் இயக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

தினசரி சமையலில் தவிர்க்க முடி​யாத அத்​தி​யா​வசி​யப் பொருளாக இருக்​கும் வெங்​கா​யத்​தின் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து வரு​வது, குடும்​பப் பட்​ஜெட்​டைப் பாதிப்​பதுடன் உணவுப் பணவீக்​கத்​தை​யும் அதி​கரிக்​கும். இதனால், நிலைமை மேலும் தீவிரமடை​யும் முன்பே விநி​யோகத்தை சீரமைக்க மத்​திய அரசு இந்த நடவடிக்​கையை மேற்​கொண்​டுள்​ளது. சிறப்பு ரயில் போக்​கு​வரத்து மட்​டுமின்​றி, அரசு தன்​னிடம் உள்ள அவசர​காலக் கையிருப்பு வெங்​கா​யத்​தை​யும் சந்​தைக்கு அனுப்ப திட்​ட​மிட்​டுள்​ளது. தட்​டுப்​பாடு நில​வும் நகரங்​களுக்கு இந்த வெங்​கா​யத்தை உடனடி​யாக அனுப்​பும்​போது சில்​லறை விற்​பனை விலை குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும், கையிருப்பை அதி​கரிக்​கும் நோக்​கில், கடந்த ஜூலை மாதத்​தில் விவ​சா​யிகளிடம் இருந்து கொள்​முதல் செய்​யப்​படும் வெங்​கா​யத்​தின் விலையை ஒரு குவிண்​டாலுக்கு ரூ.1,875-லிருந்து ரூ.2,125-ஆக (13% உயர்​வு) மத்​திய அரசு உயர்த்​தி​யிருந்​தது என்​பது குறிப்​பிடத்​தக்​கது. வெங்​காய உற்​பத்தி மையங்​களில் இருந்து பயன்​பாடு அதி​கம் உள்ள பெரிய நகரங்​களுக்கு ரயில்​கள் மூலம் பெரு​மள​வில் வெங்கா​யத்​தைக் கொண்டு சேர்ப்​ப​தன் மூலம், சந்​தை​யில்​ நில​வும்​ தட்டுப்​​பாடு தற்​​காலிக​மாக சரி​யாகி விலை படிப்​படி​யாகக்​ கட்டுக்​குள்​ வரும்​ என எதிர்​​பார்​க்​கப்​படுகிறது.