தேனி மாவட்டத்தில், அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தின் (ABR) பகுதியான மேகமலை – வருசநாடு பகுதிகளில் 5,072.653 ஹெக்டேர் நிலத்தில், 9 ஊராட்சிகளில் பரவி வாழும் சுமார் 25,000 பேரை — பெரும்பாலும் மிகச் சிறு விவசாயிகளை — வெளியேற்றும் முயற்சிக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கம், வன உரிமைச் சட்டத்தை(FRA) அப்பகுதியில் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்களை வலியுறுத்தி யுள்ளது.மாறாக, விவசாயிகளை வெளியேற்ற முயல்வது அரசு வேண்டுமென்றே, திட்டமிட்டுச் செய்யும் சட்டமீறல் என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இக்கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன:வன நிர்வாகத்தில் இந்திய அரசின் காலனிய, ஜனநாயக விரோதப் பாரம்பரியம் இந்த வெளியேற்றமுயற்சிகள் மூலம் அப்பட்டமாக வெளிப்படுகின்றன என்று சங்கம்சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளில் பெரும்பான் மையானோர் பழங்குடியினர், தலித்துக்கள், மிகவும் பிற்படுத்தப் பட்டோர்என்பது, இந்திய ஆளும்வர்க்கத்தின் கொடூரமான வன நிர்வாகத்தின் பிரதிபலிப்பே என்றும்அது தெரிவித்துள்ளது.
பாரம்பரிய வன மக்கள் இவர்கள்
இந்தச் சமூகங்கள் வன உரிமைச் சட்டத்தின் ‘பாரம்பரிய வன மக்கள்’ வரையறைக்கு முழுமையாகப்பொருந்துகின்றன. இப்பகுதி காப்புக்காடாகவும் வனவிலங்கு சரணாலயமாகவும் அறிவிக்கப்படுவ தற்கு முன்பே மக்கள் அங்கு வாழ்ந்து விவசாயம் செய்துவந்ததை வருவாய் ஆவணங்கள், ஜமீன் ஆவணங்கள், வரலாற்று வரைபடங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத்தரவுகள் தெளிவாக நிரூபிக்கின்றன என்று சங்கம்சுட்டிக்காட்டியுள்ளது. அங்கீகாரம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறை முடியும் வரை, வன மக்களை அவர்கள் வாழும் வன நிலத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்று வன உரிமைச் சட்டம் தடை விதிக்கிறது; இதை மீறியே வெளியேற்ற முயற்சி நடக்கிறது.
‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனும் முத்திரை
விவசாயிகளை ‘ஆக்கிரமிப்பா ளர்கள்’ எனப் பழி சுமத்தி, அவர்களை வெளியேற்றத் தமிழ்நாடு வனத்துறை சகல சூழ்ச்சிகளையும் கையாள்கிறது என்று சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. உயரடுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையினருடன் கைகோர்த்து, பழங்குடியினர் உள்ளிட்ட பாரம்பரிய வன மக்களை ஒடுக்கும் விஷயத்தில், வன உரிமைச் சட்டத்தை மீறியும் பிற சட்டங்களைத் திரித்தும் தமிழ்நாடு வன அதிகார வர்க்கம் மோசமாக நடந்து கொண்டுள்ளது என்றும் அதுதெரிவித்துள்ளது.
புலிகள் காப்பகங்களும் சட்ட மீறலும்
உலகளாவிய நிதி மூலதனத்துக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் சாதகமாகவும், உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் இயங்கும் வனவளங்களின் அரசியல் பொருளாதாரமே இந்த வெளியேற்ற முயற்சிகளின் மூல காரணம் என்று சங்கம் விளக்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் மட்டுமின்றி, களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. வனஉரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற கிராம சபையை நிர்வாகம் மதிப்பதில்லை; புலிகள் காப்பகங்களை உருவாக்குவதிலும் வனஉரிமைச் சட்டமும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டமும் (WLPA) மீறப்படுகின்றன என்று விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறை மீதும் விமர்சனம்
வன உரிமைச் சட்டம், வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான பல வழக்குகளில், வன அதிகார வர்க்கத்தின் சட்டமீறல்களையும் அத்துமீறல்களை யும் நீதித்துறையின் ஒரு பகுதி நியாயப்படுத்த முனைவது கவலையளிக்கிறது என்று சங்கம் தெரிவித்துள்ளது. வன வழக்குகளில் பொதுவாகவும், இந்த வழக்கில் குறிப்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின்இத்தகைய போக்குக்கு எடுத்துக்காட்டுகளை அரசியலமைப்பு வல்லுநர்களும் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். உயர்நீதிமன்றங் கள் காலனிய வன மேலாண்மை முறையில் அல்லாமல் அரசியலமைப்பு அறத்தால் வழிநடத்தப்பட வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் எந்த மீறலும் இயற்கை வளங்களைக்கொள்ளையடிக்கக் கூட்டுக் களவு முதலாளிகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அச்சட்டத்தைப் பாதுகாப்பது தேசபக்தக் கடமை என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு உடனே செயல்பட வேண்டும்
இப்பகுதியில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடுஅரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அச்சட்டத்தை அதன் உண்மையான உணர்வோடு உச்சநீதிமன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்றும் சங்கம்கோரியுள்ளது. உழைக்கும் மக்களை வனப் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றுவதை எதிர்த்து, வன உரிமைச் சட்டத்தை வலுப்படுத்த அனைத்து ஜனநாயகசக்திகளும் முன்வர வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செய லாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.
#மேகமலை