ஈரானை தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெய்ரூட்டில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா கமேனி, பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட பல தலைவர்கள் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.