45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அந்த வீடியோவில் தீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா, சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான புரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த புரோமோ வீடியோவை எடிட் செய்து மோடி - அமித் ஷா முகத்தை வைத்து தமிழக பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், பாரதத்தை வல்லரசாக்க அயராது உழைக்கும் இணையற்ற இரட்டையர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.