மதுரை மாவட்டம் செக்கானூரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கல்வித்தந்தை பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வருகிற 28-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் செக்கானூரணிக்கு வருகை தர உள்ள நிலையில், அப்போது புதிய பேருந்து நிலையத்திற்கு கல்வித்தந்தை பி.கே.மூக்கையா தேவர் பெயரை சூட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானமாக வலியுறுத்தப்பட்டது.
செக்கானூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும் வகையிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றும் வகையிலும் இந்த பெயர் சூட்டும் அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
கல்வித்துறையில் பி.கே.மூக்கையா தேவர் ஆற்றிய பங்களிப்பையும், இப்பகுதி மக்களுடனான அவரது நீண்டகால தொடர்பையும் கருத்தில் கொண்டு, புதிய பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டுவது அவருக்கு உரிய மரியாதையாக அமையும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, முதலமைச்சரின் 28-ஆம் தேதி செக்கானூரணி வருகையின்போது, 11 கிராம ஊராட்சிகளின் பொதுமக்கள் கோரிக்கையையும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் ஆகியோரின் கோரிக்கையையும் ஏற்று, செக்கானூரணி புதிய பேருந்து நிலையத்திற்கு கல்வித்தந்தை பி.கே.மூக்கையா தேவர் பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.. இந்த நிகழ்வில் கே சி திருமாறன், பன்னியான் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.