மதுரையின் மூத்த பத்திரிகையாளரும், நீண்ட காலமாக பத்திரிகைத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவருமான ஏ. புஷ்பராஜன் மறைவுக்கு மதுரை பத்திரிகையாளர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ஏ. புஷ்பராஜன், ‘போர் முரசு’ பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றியவர். தொடர்ந்து ‘தின தபால்’ உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளை சொந்தமாக பொறுப்பேற்று நடத்தி, மதுரை பத்திரிகை உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார்.
பத்திரிகைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர், செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதுடன், சக பத்திரிகையாளர்களுடனும் அன்புடனும் நட்புடனும் பழகியவர் என மதுரை பத்திரிகையாளர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
அவரது மறைவுச் செய்தி மதுரை பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள், ஏ. புஷ்பராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
“பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் பயணித்த மூத்த பத்திரிகையாளரை இழந்தது மதுரை ஊடக உலகிற்கு பேரிழப்பு. அவரது பத்திரிகைப் பணியும், சக பத்திரிகையாளர்களுடனான நட்பும் என்றும் நினைவுகூரப்படும்” என பத்திரிகையாளர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மறைந்த ஏ. புஷ்பராஜனின் உடலுக்கு மதுரை பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மதுரை பத்திரிகை உலகின் மூத்த ஆளுமைக்கு கண்ணீர் அஞ்சலி…