மதுரை, செப். 16-

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து ஐந்து வயது பெண் யானை ஒன்று நேற்று வந்தது.

இக்கோயிலில் ஏற்கனவே ‘பார்வதி’ என்ற பெண் யானை 2002 முதல் சேவை செய்து வரும் நிலையில், தற்போது அசாமின் மானஸ் தேசிய பூங்காவில் இருந்து ‘துர்கா’ என்ற 5 வயது பெண் யானையை தமிழக அரசு வாங்கியது.

‘கோயில்களுக்கு புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாக பெறவோ கூடாது’ என்று தனி நீதிபதி விதித்த தடையை, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அண்மையில் ரத்து செய்தது. இதையடுத்து வனத்துறையும் ஒப்புதல் வழங்கியது.

அசாமில் இருந்து 3 ஆயிரம் கி.மீ., பயணித்த இந்த யானை நேற்று கோயிலை வந்தடைந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வந்த யானையை கோயில் பணியாளர்கள், பக்தர்கள் மலர் துாவி வரவேற்றனர். கோயில் மரபுகளை காக்க உருவாக்கப்பட்டுள்ள சென்னை நீலாங்கரை சேவா டிரஸ்ட் சார்பில் இந்த யானை கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டு

ள்ளது. சில நாட்களுக்கு முன் ஒட்டகமும் வாங்க

ப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.