மதுரை, செப்.16-
மதுரை மாநகராட்சி வளாகத்தில் உள்ள பூங்காவை பசுமை மண்டலமாக பராமரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பசுமை பூங்கா
மதுரை செனாய் நகரை சேர்ந்த ஜெயசெல்வபாண்டி யன், கே.புதூரை சேர்ந்த திரசேகரன், சுந்தரலிங்கம், கோமதிபுரம் அகமது ஷமூன், சின்ன சொக்கிகுளம் ஆனந்த் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாநகராட்சி வளா கத்தில் பல ஆண்டுக்கு முன்பு ‘பசுமை பூங்கா (ஈகோ பார்க்) அமைக்கப்பட்டது. அதிக அளவில் மரங்கள் வளர்த்து இப்பகுதியை பசுமை மண்டலமாக பராமரித்தனர். அது மட்டுமல்லாமல் முதியவர் கள் ஓய்வு எடுக்கவும், அனைத்து தரப்பினரும் நடைப்பயிற்சி மேற்கொள்ப வர்களுக்கு உரிய வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. இதன்மூலம் மதுரை மாநகர
மக்கள் ஏராளமானவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுப் பது, பொழுது போக்குவது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காலப்போக் கில் அந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இப்போது அதனை பொழுது போக்கு மையமாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப் சந் பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலானவர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. எனவே ஈகோ பூங்கா வளா கத்தை இப்பகுதி மக்களின் ஓய்விடமாகவும், நகரின் முக் கிய பசுமை மற்றும் சுவாச மண்டலமாகவும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
பொழுதுபோக்கு பூங்கா
இந்த பூங்கா அமைத்ததன் நோக்கத்திற்கு முரணாக முழுக்க முழுக்க பொழுது போக்கு பூங்காவாக மாற்று வதை தடுக்க வேண்டும் . பொது மக்கள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ப வர்கள் காலை, மாலை வேளைகளில் எவ்விதநுழைவு கட்டணமும் இன்றி இந்த பூங் னர்.
காவை பயன்படுத்த அனும மையப்பகுதியில் அமைக்கப் /பட்டு செயல்பாடின்றி கிடக் கும் நீரூற்றை புதுப்பிக்க வேண்டும். மாநகராட்சி அதி காரிகள் இந்த பூங்காவை 3 மாதத்துக்குள் பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
சி.வி.கார்த்திகேயன், சக்தி இந்த வழக்கு நீதிபதிகள் வேல் ஆகியோர் முன்பு விசா ரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மாந கராட்சி வளாகத்தில் உள்ள ‘ஈகோ பூங்காவை மதுரை மாநகருக்கு தேவையான பசுமை மற்றும் சுவாச மண் டலமாகவும் பராமரிக்கப்படு வதை உறுதி செய்ய வேண் டும்.முதல் கட்ட நடவடிக்கை யாக, அந்த பூங்காவின் மையப்பகுதியில் உள்ள நீரூற்றை செயல்பாட்டிற்கு எ கொண்டு வரப்பட வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக வருகிற 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.