மதுரை, செப் 2-


ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) சார்பில் மாணவர்களின் திறன், தயார்நிலை மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான செயல்திறனை மதிப்பிடும் ANTHE 2026 திறன் தேடல் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த 16 ஆண்டுகளில் 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ள ANTHE, மாணவர்களின் பாட அறிவு, பகுப்பாய்வுத் திறன், திறனறிவு மற்றும் தேர்வு செயல்திறனை அறிவியல் முறையில் மதிப்பிடும் முக்கியத் தளமாக உருவெடுத்துள்ளது.

ANTHE 2026 தேர்வில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் தேர்வு நடைபெறுகிறது. தகுதி அடிப்படையில் மாணவர்களுக்கு 100 சதவீதம் வரை கல்வி உதவித்தொகையும், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.


ஆன்லைன் தேர்வு அக்.27 முதல் நவ.1, 2026 வரையும், ஆஃப்லைன் தேர்வு அக்.11, 25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இதற்கான பதிவுகள் அதிகாரப்பூர்வ ANTHE இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆகாஷ் மையங்களில் நடைபெற்று வருகின்றன.மாணவர்கள் தங்களின் பலம், மேம்படுத்த வேண்டிய பகுதிகள் மற்றும் போட்டித் தேர்வுக்கான தயார்நிலையை அறிந்து கொள்ள ANTHE உதவும் என AESL நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திர சேகர் கரிசா ரெட்டி தெரிவித்தார்.