மதுரையில் பீமா ஜுவெல்லரி நிறுவனம் தனது இரண்டாவது ஷோரூமை அண்ணா நகரில் திங்கள்கிழமை பிரமாண்டமாக திறந்தது. திறப்பு விழாவையொட்டி காலை முதலே ஏராளமான பொதுமக்கள், குடும்பத்தினர் மற்றும் நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் திரண்டதால் அண்ணா நகர் பகுதியில் விழாக்கோலம் காணப்பட்டது.


ஷோரூமை திரைப்பட நடிகை பிரீதி முகுந்தன் நண்பகல் 12.15 மணியளவில் பொதுமக்களின் உற்சாக வரவேற்பு மற்றும் ஆரவாரத்துக்கு மத்தியில் திறந்து வைத்தார்.


புதிய ஷோரூமுக்கு மதுரை மக்கள் அளித்த வரவேற்பு சிறப்பாக இருந்தது. குடும்பத்தினர், திருமண நகைகள் வாங்குவோர் மற்றும் பீமா ஜுவெல்லரியின் நீண்டகால வாடிக்கையாளர்கள் என நாள் முழுவதும் ஏராளமானோர் ஷோரூமுக்கு வருகை தந்தனர்.


1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பீமா ஜுவெல்லரி , 101 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இரண்டாவது ஷோரூம் திறக்கப்பட்டிருப்பது நிறுவனத்தின் தென் தமிழக விரிவாக்கத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


அண்ணா நகர் ஷோரூமில் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் என பல்வேறு வகையான கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. அன்றாட பயன்பாட்டுக்கான நகைகள் முதல் திருமணத்திற்கான பிரத்யேக நகைகள் வரை பல்வேறு வடிவமைப்புகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மதுரையில் ஏற்கனவே ஒரு ஷோரூம் செயல்பட்டு வரும் நிலையில், புதிய அண்ணா நகர் கிளை மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் விரிவான சேவையை வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


பீமா ஜுவெல்லரியின் கிளைகள் மார்த்தாண்டம், சேலம், திருநெல்வேலி, திருச்சி, ராஜபாளையம், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும், தஞ்சாவூர் மற்றும் காரைக்குடியிலும் விரைவில் புதிய ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


திறப்பு விழா சலுகைகள்


அண்ணா நகர் ஷோரூம் திறப்பை முன்னிட்டு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்க நகைகளுக்கான VA-வில் 60 சதவீதம் வரை தள்ளுபடி, ஒவ்வொரு ரூ.1 லட்சம் கொள்முதலுக்கும் இலவச தங்க நாணயம், வைர நகைகளுக்கு ஒரு காரட்டுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி, ஆன்டிக் நகைகளுக்கான VA-வில் 30 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.


மேலும், பெரும்பாலான வெள்ளிப் பொருட்களுக்கு 0 சதவீத செய்கூலி/சேதாரம் மற்றும் பழைய தங்க நகைகளை மாற்றிக் கொள்பவர்களுக்கு ஒரு கிராமுக்கு கூடுதலாக ரூ.200 மதிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.