மதுரை: Royal Enfield-ன் பாரம்பரியமிக்க 125-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளவில் நடைபெற்ற One Ride 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக மதுரையில் “புல்லட் திருவிழா” September 20 - 2026 அன்று மதுரையின் அரசரடி U.C.school மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட Royal Enfield ரைடர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் 63 நாடுகளில் 1,25,000-க்கும் மேற்பட்ட Royal Enfield ரைடர்கள் ஒரே நாளில் பங்கேற்ற One Ride 2026-ன் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக மதுரையிலும் இந்த சிறப்பு திருவிழா நடைபெற்றது.
Royal Enfield-ன் பாரம்பரியம், மோட்டார்சைக்கிளிங் கலாச்சாரம் மற்றும் ரைடர்களின் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில், Royal Enfield ரைடர்களுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
விழாவில் மோட்டார்சைக்கிள் சார்ந்த விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுகள், கலாச்சார நடன நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, இசை நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், Royal Enfield-ன் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்கள்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாடலையும் நேரடியாக அனுபவிக்கும் வகையில் Test Ride-க்காக பிரத்யேக Track அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ரைடர்கள்ள் Royal Enfield மோட்டார்சைக்கிள்களின் செயல்திறன் மற்றும் Riding Experience-ஐ நேரடியாக அனுபவித்தனர்.
மேலும், Royal Enfield Helmets, Riding Gears, Apparels, Exchange Mela மற்றும் உணவு ஸ்டால்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, Royal Enfield-ன் புதிய Himalayan 440 மோட்டார்சைக்கிள் - ரைடர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த One Ride 2026 நிகழ்வில் Royal Enfield டீலர்களான திரு. கே.ஜி. ஆதிலிங்கம், திரு. கே.ஜி. வெங்கடேசன், திரு. ஜி.ஏ. ராஜ்குமார் மற்றும் திரு. பி. ஈஷ்வர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும், Royal Enfieldன் Regional Business Manager திரு . G.V. பிரவீன் குமார், Regional Service Manager திரு.R.தமிழ் அழகன்,
Area Sales Manager திரு. பிரபாகரன், திரு. முரளி, Area Service Manager திரு. பழனிவேல், Dealer Development Manager திரு. பிரபு, Technical Support Manager திரு. சாய் பிரதீப் உள்ளிட்ட Royal Enfield நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மதுரையைச் சேர்ந்த பல்வேறு Royal Enfield உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து, தங்களது மோட்டார்சைக்கிளிங் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், Royal Enfield-ன் பாரம்பரியமான Riding Culture-ஐ உற்சாகமாக கொண்டாடினர்.
சிறப்பம்சமாக கடந்த 16 வருடங்களாக மதுரையில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் Royal pandiyas madurai Enfielder's club-ன் 16 ஆம் ஆண்டு விழா royal pandiyas Riders மற்றும் அனைவர் முன்னிலையிலும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது..
“Temple City” என்று அழைக்கப்படும் மதுரை, Royal Enfield மற்றும் Bullet ரைடர்களின் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் பங்கேற்பின் மூலம், “Bullet City” என்ற சிறப்புப் பெயரையும் பெறும் வகையில் வளர்ந்து வருகிறது.
மதுரையின் பாரம்பரியத்தையும், Royal Enfield-ன் மோட்டார்சைக்கிளிங் கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்த இந்த One Ride 2026 நிகழ்வு, ரைடர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றது.